Business Take Off - Day 1 - Find Your Passion - Tamil - Zammy Zaif
Find your Passion - தமிழில்
8 நாட்கள் 80 நிமிடங்கள் - Business Takeoff - Club House - Day 1
![]() |
| Business Take Off - Day 1 - Find your Passion |
#உங்களுடைய Passion -ஐ தேடுங்கள்
சின்ன வயதிலிருந்து நிறைய ஆசைப்பட்டு இருப்போம். வானத்தில் போகிற விமானத்தைப் பார்க்க ஆசைப்பட்டது முதல் அதை ஓட்டிப் பார்ப்பது வரை. ஆனால் அதெல்லாம் சின்ன சின்ன ஆசைகள். அந்தந்த நேரத்திலோ, பருவத்திலோ முடிந்து போகக் கூடியவை. Passion என்பது வேறு, உறங்க விடாமல் துரத்த வைக்கும். தீராத தாகமாய் உங்களை ஏங்க வைக்கும். வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கத் தூண்டும். வாழ்வின் ஒரு பகுதியாக அதை மாற்றிக்கொள்ளத் தோன்றும்.
"PASSION... அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க" என்கிறீர்களா...
ஒவ்வொரு மனிதனும் வித்தியாசமானவன், தனித்துவம் மிக்கவன். ஏதோ ஒரு திறமை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்திருக்கும். சிலர் அதை உணர்ந்து இருப்பார்கள். சிலர் அதை உணராமலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். எல்லாவற்றுக்கும் முதல் புள்ளியாக உங்கள் திறமைகளைக் கண்டறியுங்கள்.
திறமையை (SKILLS) எப்படிக் கண்டறிவது?
ஒரு அமைதியான மனநிலையில் இருக்கும்போது, உங்களைப் பற்றிய எண்ணங்களை ஓட விடுங்கள். நினைவு தெரிந்த நாளிலிருந்து, இந்த நொடி வரையிலான உங்களின் வாழ்வை அசை போடுங்கள். ஒரு வெள்ளைத்தாளில் உங்களின் பலம், பலவீனம், விருப்பு, வெறுப்பு, திறமைகள், நண்பர்கள், ரசித்த, பிடித்த விஷயங்கள் என அனைத்தையும் பட்டியலிடுங்கள்.உங்களின் நண்பர்கள், நலம் விரும்பிகள் என உங்களைச் சுற்றி உள்ளவர்களிடம், உங்களைப் பற்றிய எண்ணங்கள் மற்றும் மதிப்பீடுகள் பற்றிக் கேளுங்கள். இப்போது இவை மிகப்பெரிய குறிப்புகளாக உருவாகியிருக்கும். இவற்றில் நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்கள்? எதைச் செய்தால் மகிழ்வும் மனத் திருப்தியும் கிடைக்கும் என நினைக்கிறீர்கள் என்பதைக் கண்டறியுங்கள்.
இப்போது நிதானமாக ஒரு வெள்ளைத்தாளில் எழுதத்தொடங்குங்கள்.
• உங்களின் பலம், பலவீனம், விருப்பு, வெறுப்பு, திறமைகள், நண்பர்கள், இரசித்த, பிடித்த விஷயங்கள் என அனைத்தையும் பட்டியலிடுங்கள். உங்களின் நண்பர்கள், நலம் விரும்பிகள் என உங்களைச் சுற்றி உள்ளவர்களிடம், உங்களைப் பற்றிய எண்ணங்கள் மதிப்பீடுகள் பற்றிக் கேளுங்கள்.
• நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்கள்?
• எந்த விஷயத்தில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக, திருப்தியாக உணர்கிறீர்கள்?
முதலில் இதற்கான பதில்களைத் தேடுங்கள்.
#உங்களுடைய இலக்குகள் என்ன?
• இலக்கு (Goal)
இலக்கு என்பது ஓயாத கனவு. எல்லாருக்கும் ஏதோ ஒரு கனவை நோக்கி, அது காட்டும் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டே இருப்போம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான, இலக்குகள் இருக்கலாம். ஒரு பெரிய தொழில் முனைவோர், விளையாட்டு வீரர், பிரபல பாடகர், இசையமைப்பாளர், சிறந்த ஆசிரியர் இப்படி எத்தனையோ இலக்குகள்.
• குறுகியகால இலக்கு (Short Time Goal)
ஆரம்பத்தில் நம்மில் பலருக்கு, ஒரு நல்ல மொபைல் போன் வாங்கவேண்டும் என ஆசைப்பட்டிருப்போம். பிராண்ட், விலை, தரம்,மாடல் என எவ்வளவு யோசிப்போம்? நீங்கள் வாங்கிய முதல் மொபைல் இன்னும் நினைவில் இருக்கிறது தானே... இப்படி மொபைல் மட்டுமல்ல கார்,வீடு இன்னும் பல விசயங்களை நம் வாழ்வில் இப்படித்தான் அணுகியிருப்போம். இவை எல்லாமே குறுகியகால இலக்குகள்.
• நீண்டகால இலக்கு (Long Time Goal)
மேலே சொன்ன குறுகியகால இலக்குகளைச் சென்றடைய நமக்கு முக்கியமான ஒரு விசயம் தேவை. ஆம் பொருளாதாரம் மற்றும் அதற்குத் தேவையான உழைப்பு. நம்முடைய குறுகிய கால இலக்குகளை அடைய நிச்சயம் பொருளாதாரம் தேவை. அதை எதிலிருந்து ஈட்டப்போகிறோம் என்பது மிக முக்கியமான நீண்டகால இலக்கு. வாழ்க்கையை நாம் தனியாக, நம் சொந்தக்கால் ஊன்றி ஆரம்பிக்கும் நொடியிலிருந்து, நம் ஓய்வுக்காலத்திற்கான முன்னேற்பாடுகள் வரை தொடர்கிறது, இந்த நீண்டகால இலக்குகள்.
எனவே எப்போதும் இரண்டு விதமான இலக்குகளைத் தேர்ந்தெடுத்து, படிப்படியாகத் தொடர்ந்து முன்னேறுங்கள்.
ஒரு பொழுதுபோக்கிற்கும் தோழிற்கும் இடையேயான வேறுபாட்டைப் பிரித்தறியுங்கள்.
மேலே சொன்னவற்றை எல்லாம் ஆராய்ந்த பிறகு, சில குழப்பங்கள் வரலாம். எனக்கு நிறையப் பொழுதுபோக்குகள் இருக்கின்றன.
ஆனால், அதையெல்லாம் தொழிலாக மாற்ற முடியுமா?
அல்லது அவற்றில் எதைத் தொழிலாக மாற்ற வேண்டும்?
பசி,தாகம்,தூக்கம் மறந்து ஏதாவது ஒரு பொழுதுபோக்கில் நீங்கள் ஈடுபட்டது உண்டா?
ஓவியம், பாடல், நடனம், டிசைனிங் இப்படி ஏதாவது ஒரு செயலில் நம்மை மறந்து ஆழ்ந்திருப்போம். இதுதான் நம்முடைய தீவிரமான ஆர்வம். நண்பர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு என, ஏதாவது ஒரு செயலை அடிக்கடி செய்து கொடுத்திருக்கிறீர்களா? அதைத் திரும்பத்திரும்பக் கேட்டு உங்களிடம் மற்றவர்கள் அணுகுகிறார்களா? இதை உன்னால் எளிதாகச் செய்ய முடியும், உன்னால் மட்டும்தான் இவ்வளவு நிறைவாகச் செய்யமுடியும் என்ற பாராட்டுகள் கிடைத்திருக்கின்றனவா?
இதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்கள் திறமை. இதைமேலும் மெருகேற்றுங்கள். நிச்சயம் ஓர்நாள் வைரமாக மின்னுவீர்கள்.
ஒன்றை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். பொழுதுபோக்கை, தீராத Passion-ஐ ஒரு வெற்றி மிக்க தொழிலாக நிச்சயம் மாற்ற முடியும். ஆனால், அதேவேளையில் தொழிலைப் பொழுதுபோக்காகச் செய்யவே முடியாது. அது ஆபத்தானதும் கூட. பொழுதுபோக்கைத் தொழிலாக எடுக்கும்பட்சத்தில், அதைத் தொழிலாக மாற்றக் கூடிய, அத்தனை சாத்தியக் கூறுகள் மற்றும் திட்டமிடலை மிகச்சரியாக ஆராய்ந்து விட்டே, செயலில் இறங்குங்கள்.
• உங்களிடம் தொழிலுக்கான ஆர்வமோ, யோசனையோ உள்ளதா?
உண்மையாகவே உங்களுக்குத் தொழில் செய்வதற்கான ஆர்வம் உள்ளதா என யோசியுங்கள். ஏதோ ஒரு பொழுது போக்கைக் கையில் எடுப்பது போல் எடுக்காதீர்கள். ஆர்வம் உண்மை எனில் அந்தத் தொழில் பற்றிய திட்டமிடல் குறிக்கோள் அதைத் திறம்படத் தொடர்ந்து நடத்துவதற்கான வாய்ப்புகள் அத்தனையும் ஆராய்ந்து முடிவெடுங்கள். ஏனெனில் தொழில் என்பது உங்களின் பொருளாதார நிலைக்கான அடித்தளம்.
"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவோம் என்பது இழுக்கு".
ஒரு செயலை செய்யத் தொடங்குவதற்கு முன்பே, அதைப் பற்றித் தீர ஆராய்ந்து இருக்க வேண்டும். செயலைத் தொடங்கியபின் ஆராய்வது என்பது இழுக்கு என்கிறார் வள்ளுவர். இந்த திருக்குறள் 100% இதற்குப் பொருந்தும்.
- Deep Leaning
• உங்களுடைய Passion உங்களது தொழிலாக மாறவோ அல்லது அதில் முக்கியப்பங்கு வகிக்கவோ முடியுமா?
நிச்சயம் முடியும்!!!
அதற்குக் கொஞ்சம் மாற்றி யோசிக்க வேண்டும் அவ்வளவே. உதாரணத்திற்கு ஒரு சின்ன டீ கடையை எடுத்துக்கொள்ளலாம். இதை ஒரு Cafe - ஆக மாற்றுவது தொழிலின் அடுத்த கட்டம். இங்கு இளையராஜா பாடல்கள் மட்டுமே மெலிதாக ஒலிக்க விடுவேன் என்பது, உங்கள் ரசனை. எனக்குப் புத்தகங்கள் பிடிக்கும் எனவே, ஒரு சின்ன புத்தக அலமாரி வைத்து வாடிக்கையாளர்களைப் புத்தகம் படிக்கத் தூண்டுவேன் என்பது, உங்கள் பொழுதுபோக்கை உங்கள் தொழிலின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மாற்றுவது. இதன் மூலம் உங்கள் தொழில் மற்றும் பொழுதுபோக்கு இரண்டின் அடையாளமும் சிறப்பாக மாறுகிறது. உண்மையில் இந்தப் புத்தக வாசிப்பை எந்த தொழிலும், இடத்திலும் அழகாகப் பொருத்திப் போகச் செய்ய முடியும். உங்கள் Passion, தொழில் இரண்டுக்கும் இடையேயான தொடர்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராயுங்கள். வழிகள் எட்டுத்திக்கும் உண்டு.
ஆம், இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன எனில்....
#எது?
#ஏன்?
#எப்படி?
#எங்கே?
#எப்போது?
எனும் வினாக்களுக்கான பதில்களைத் தேட துவங்குங்கள்.
#இல்லை எனில்...

அருமையான பதிவு
ReplyDelete