Business Take Off - Day 1 - Find Your Passion - Tamil - Zammy Zaif
Find your Passion - தமிழில் 8 நாட்கள் 80 நிமிடங்கள் - Business Takeoff - Club House - Day 1 Business Take Off - Day 1 - Find your Passion #உங்களுடைய Passion -ஐ தேடுங்கள் சின்ன வயதிலிருந்து நிறைய ஆசைப்பட்டு இருப்போம். வானத்தில் போகிற விமானத்தைப் பார்க்க ஆசைப்பட்டது முதல் அதை ஓட்டிப் பார்ப்பது வரை. ஆனால் அதெல்லாம் சின்ன சின்ன ஆசைகள். அந்தந்த நேரத்திலோ, பருவத்திலோ முடிந்து போகக் கூடியவை. Passion என்பது வேறு, உறங்க விடாமல் துரத்த வைக்கும். தீராத தாகமாய் உங்களை ஏங்க வைக்கும். வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கத் தூண்டும். வாழ்வின் ஒரு பகுதியாக அதை மாற்றிக்கொள்ளத் தோன்றும். "PASSION... அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க" என்கிறீர்களா... ஒவ்வொரு மனிதனும் வித்தியாசமானவன், தனித்துவம் மிக்கவன். ஏதோ ஒரு திறமை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்திருக்கும். சிலர் அதை உணர்ந்து இருப்பார்கள். சிலர் அதை உணராமலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். எல்லாவற்றுக்கும் முதல் புள்ளியாக உங்கள் திறமைகளைக் கண்டறியுங்கள். திறமையை (SKILLS) எப்படிக் கண்டறிவது? ஒரு அமைதியான மனநிலையில் இருக்கும்போது, உங்களை...